உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மருத்துவமனையில் சோதனை:சகதி ரோட்டில் நடக்க முடியல

 மருத்துவமனையில் சோதனை:சகதி ரோட்டில் நடக்க முடியல

மதுரை: மாநகராட்சிக்கு போட்டியாக மதுரை அரசு மருத்துவமனையிலும் கழிவுநீர் குழாய் பதிப்பதற்காக ரோடு தோண்டப்பட்டு மழைபெய்த நிலையில் வழுக்கி விடும் சகதி காடாக மாறியுள்ளது. தொடர் மழையால் மகப்பேறு வார்டு முன்புறமுள்ள பெரிய பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. அருகிலேயே பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' மூடி சரியாக மூடாமல் மேலெழுந்து நிற்கிறது. மனநல வார்டுக்கு உட்பகுதியிலும் வெளியிலும் உள்ள ரோட்டின் பள்ளத்தில் மழைநீர் நிரந்தரமாக தேங்கி நிற்கிறது. ஆடிட்டோரியம் பகுதியிலிருந்து குழந்தைகள் நல வார்டு, சர்க்கரை நோய் வார்டு, கலங்கரை விளக்கம் வார்டு வரை கழிவுநீர் குழாய் பதிக்க ரோடு தோண்டப்பட்டு ஆடிட்டோரியம் பகுதிகளில் அரைகுறையாக பள்ளத்தை மூடியுள்ளனர். ஒரு பக்க கார் பார்க்கிங்கை கழித்த பின் நடப்பதற்கும் வாகனங்கள் செல்வதற்கும் மொத்தமே பத்தடி அகல ரோடு தான் உள்ளது. அதிலும் நான்கு அடி வரை ரோடு மேடு பள்ளமாக இருப்பதால் கார், ஆட்டோ சென்றால் கூட நடந்து செல்ல முடியாத அளவு ரோடு குறுகியுள்ளது. கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக ரோட்டை முழுமையாக சீர்செய்திருக்க வேண்டும். மழையும் தொடர்ந்து பெய்த நிலையில் களிமண் சேறாகி நடந்தால் வழுக்கி விழும் நிலையில் உள்ளது. நோயாளிகளும் உடன் வருபவர்களும் பயத்துடன் ஒவ்வொரு அடியாக நடந்து செல்கின்றனர். ரோட்டின் ஓரங்களில் கற்களை கொட்டியுள்ளதால் பாதசாரிகள் நடுரோட்டில் மட்டுமே நடந்து செல்ல முடிகிறது. நோயாளிகள், அவர்களுடன் வருவோர் நலன்கருதி உடனடியாக ரோட்டை சரிசெய்து சகதியை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை