உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த யோசனை

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த யோசனை

மதுரை : ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை கடைப்பிடித்து தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம் என மதுரை வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் சுரேஷ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:வெள்ளை ஈக்களை அழிக்க தென்னங்கீற்றுகளின் அடிப்பரப்பு மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும். 5 அடி நீளம் ஒன்றரை அடி அகலமுள்ள மஞ்சள் நிற பாலிதீன் தாளின் இருபுறமும் விளக்கெண்ணெய் தடவி ஏக்கருக்கு 20 வீதம் தென்னை மரத்தில் ஆறடி உயரத்தில் தொங்கவிடலாம். அல்லது தண்டுப்பகுதியில் சுற்றி வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.'அபேடோக்கிரைசா' இரை விழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 வீதம் கீற்றுகளில் இணைத்து கட்டலாம். 'என்கார்சியா' ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 10 இலைத்துண்டுகள் வீதம் பத்து மரத்திற்கு ஒரு இலைத்துண்டு என்ற எண்ணிக்கையில் கீற்றுகளில் இணைத்து கட்டலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி வேப்பெண்ணெய் மற்றும் ஒரு மில்லி ஒட்டும் திரவம் கலந்து மரங்களின் அடிகீற்றுகள் நனையும் படி தெளிக்க வேண்டும்.ஒரு லிட்டர் தண்ணீரில் 25 கிராம் மைதா மாவு பசையை கரைத்து தெளித்து கரும்பூசணத்தை நீக்கலாம். இயற்கை எதிரிகளை பாதுகாக்க பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உரங்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை