உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளிகளில் வாசிப்புத் திறனை மேம்படுத்துங்கள்: அமைச்சர் 

பள்ளிகளில் வாசிப்புத் திறனை மேம்படுத்துங்கள்: அமைச்சர் 

மதுரை : மதுரை மேற்கு ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி நுாலகங்கள் மூலம் மாணவர்களின் அறிவுத்தேடல், வாசிப்புத் திறன்களை மேம்படுத்தும் திட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. கல்வி அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார். பள்ளிக்கு தேவையான பொருட்களை அமைச்சர்கள் வழங்கினர். இதையடுத்து செட்டிகுளம், கொடிக் குளம் ஊராட்சி அரசு உயர்நிலை பள்ளிகளை மேல்நிலையாக தரம் உயர்த்தி உத்தரவை சி.இ.ஓ., ரேணுகா, தலைமையாசிரியர்களிடம் வழங்கினார். கொடிக்குளத்தில் பள்ளிக்கு நிலம் தானம் வழங்கிய பூரணம்மாள் கவுரவிக்கப்பட்டார். பின்னர் கலைஞர் நுாற்றாண்டு நினைவு நுாலகத்தில் மாநில அளவிலான அடைவுத் தேர்வு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார். எம்.எல்.ஏ., வெங்கடேசன்,தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ், இணை இயக்குநர்கள் சுவாமி நாதன், குமார், டி.இ.ஓ., இந்திராணி, பி.ஆர்.ஓ., சாலி தளபதிபங்கேற்றனர். ஆசிரியர்கள் மனு: கொடிக்குளத்தில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை சார்பில் அதன் மாநில தலைவர் ஆரோக்கியதாஸ், கல்வி அமைச்சரிடம் அளித்த மனுவில், ஆசிரியர்களுக்கு டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ