உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில்... ஓடவும் முடியாது; நடத்தவும் முடியாது! தேசிய போட்டிகளால் அரங்கங்கள் சேதம்

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில்... ஓடவும் முடியாது; நடத்தவும் முடியாது! தேசிய போட்டிகளால் அரங்கங்கள் சேதம்

மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சமீபத்தில் நடந்த கேலோ இந்தியா தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக செயற்கை ரப்பர் தடகள அரங்கம், அதனுள்ளே இருந்த கால்பந்து அரங்குகள் தோண்டப்பட்டதால் முழுமையாக சேதம் அடைந்துள்ளது.ஜன.,21 முதல் 23 வரை தேசிய கட்கா போட்டிகளும் ஜன.,26 முதல் 30 வரை கோகோ போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளுக்கு முன்பாக மதுரை ரேஸ்கோர்ஸில் உள்ள 400 மீட்டர் செயற்கை தடகள டிராக், உட்பகுதியில் உள்ள கால்பந்து அரங்கை கட்கா, கோகோ போட்டிக்கான ஆடுகளமாக மாற்றினர்.டிராக்கின் 100 மீட்டர் தடகள ஆரம்பப்பகுதியில் பெரிய கம்பி பொருத்தப்பட்டு அகற்றப்பட்ட நிலையில் ரப்பர் தளம் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. தவிர இயற்கை புல்தரை கால்பந்து அரங்கும் முழுமையாக தோண்டப்பட்டு புற்கள் அகற்றப்பட்டன. மீண்டும் இயற்கை புல் மைதானமாக மாற்ற ரூ. பல லட்சம் செலவாகும்.ஏற்கனவே இந்த செயற்கை ரப்பர் டிராக் 2006 --07 ல் அமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. கடந்தாண்டு ரூ.8 கோடி செலவில் தடகள அரங்கின் மேற்பகுதியில் உள்ள ரப்பர் துகள்கள் மட்டும் அகற்றப்பட்டு அதன் மேல் புதிதாக செயற்கை ரப்பர் டிராக் அமைக்க ஒப்புதல் அனுப்பப்பட்ட நிலையில் மீண்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய போட்டிகளுக்காக டிராக், கால்பந்து மைதானம் முழுமையாக சேதப்படுத்தப்பட்டதால் விடுதி மாணவர்கள் தற்போது வேறு எங்கும் பயிற்சி பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.மதுரை மாவட்ட அளவில் நடக்கும் குறுவட்ட, மாவட்ட, வருவாய் மாவட்ட மற்றும் மாநில தடகள போட்டிகளும் இனிமேல் நடத்த முடியாது. மதுரையில் வேறு எங்கும் 400 மீட்டர் தடகள டிராக் இல்லாத நிலையில் அடுத்த ஆண்டுக்கான போட்டிகள் துவங்குவதற்குள் மைதானத்தை சீரமைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை