மேலும் செய்திகள்
வேளாண் கூடுதல் இயக்குநர் ஆய்வு
16-Oct-2024
மதுரை; திருமங்கலம் சின்ன வாகைக்குளத்தில் திருமங்கலம் கியூ உழவர் உற்பத்தியாளர் குழுவின் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்தார்.மதுரை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி, விற்பனைக்குழு செயலாளர் அம்சவேணி, வேளாண்மை அலுவலர்கள் சித்தார்த், மீனா, குழுத்தலைவர் ராம்குமார் ஏற்பாடுகளை செய்தனர்.கலெக்டர் சங்கீதா கூறியதாவது: உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கிராமப்புற இளைஞர்கள், வேளாண் தொழில்முனைவோர்கள் ஆகியோர் தமிழக அரசின் சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற தகுதியானவர்கள். இத்திட்டத்தின் கீழ் பதப்படுத்தும் இயந்திரங்களை வாங்குவதற்கு திட்டமதிப்பில் 75 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.18.75 லட்சம் மானியமாக வழங்கப்படும் என்றார்.வேளாண்மை இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர்கள் ராணி, பிரபா, நபார்டு வட்டார வளர்ச்சி மேலாளர் சக்திபாலன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் சரவணபெருமாள் கலந்து கொண்டனர். இத்திட்டத்தில் பயன்பெற மாவட்ட வள அலுவலர் சாமுவேலை 97915 41990 ல் தொடர்பு கொள்ளலாம்.
16-Oct-2024