உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அலங்காநல்லுாரில் அதிகரிக்கும் பிளக்ஸ்

அலங்காநல்லுாரில் அதிகரிக்கும் பிளக்ஸ்

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் பேரூராட்சியில் 'பிளக்ஸ் போர்டுகள்' அதிகளவில் வைத்து வருகின்றனர்.இங்குள்ள மெயின் ரோடுகளில் பல இடங்களில் விழாக்களுக்காக 'பிளக்ஸ்கள்' அனுமதி இன்றி வைக்கின்றனர். கேட் கடை பாலத்தில் இருபுறமும் நிரந்தரமாக மாறி, மாறி 'பிளக்ஸ்' கட்டி வருகின்றனர். கோயில் விழாக்கள், கட்சி நிகழ்ச்சி, இல்ல விசேஷம் என 'பிளக்ஸ்கள்' பாலத்தை ஆக்கிரமித்து வைக்கப்படுகிறது.பல நாட்கள் முன்னதாகவே 'பிளக்ஸ்' வைக்கும் நபர்கள் விழா முடிந்தும் அதை அகற்றுவதில்லை. இதற்கான மரச் சாரங்கள் கட்டியபடியே உள்ளது. பல நாட்களாக வெயில், மழையில் நனைவதால் அவை வலுவிழந்து விழும் நிலையில் உள்ளன. நீதிமன்ற உத்தரவை மீறி வாகன ஓட்டிகள் கவனத்தை திசை திருப்பும் விதமாக வைக்கப்படும் போர்டுகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை