இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்க தேசிய ஆண்டு மாநாடு போட்டிகள்; விருதுநகர் மாணவர்கள் முதலிடம்
விருதுநகர் : பஞ்சாப் மாநிலம் லாம்ரின் தொழில்நுட்ப திறன் பல்கலையில் இந்திய தொழில்நுட்பக்கல்வி சங்க (ஐ.எஸ்.டி.இ.,) தேசிய ஆண்டு மாநாட்டு போட்டியில் விருதுநகர் மாவட்டம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் முதலிடம் வென்றனர்.தேசிய அளவில் 60க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் மருந்து, செயற்கை நுண்ணறிவு, எலக்ட்ரிக்கல் உள்பட பல்வேறு பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு இடையே போட்டிகள் நடந்தது.இப்போட்டியில் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் கயல்விழி, வருண்கணேஷ், கோகுல் பங்கேற்றனர். இவர்கள் விவசாயத்தில் விதை நடவு, தண்ணீர் தெளித்தல், களையெடுத்தல், மண்நுகர்வு பரிசோதனை செய்யும் தானியங்கி ரோேபாவை வடிமைத்திருந்தனர். இறுதி போட்டியில் முதலிடம் வென்றனர். இந்த ரோபாவை அலைபேசி மூலம் இருக்கும் இடத்தில் இருந்து எளிதாக கையாள முடியும். இவர்களுக்கு உதவி பேராசிரியர்கார்த்திக் பிரபு வழிகாட்டுதல் வழங்கினார்.