உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதல்வர் மருந்தகத்தில் கடன்வசதி தனிநபர் தொழில்முனைவோர் வலியுறுத்தல்

முதல்வர் மருந்தகத்தில் கடன்வசதி தனிநபர் தொழில்முனைவோர் வலியுறுத்தல்

மதுரை : 'முதல்வர் மருந்தகத்தில் கூட்டுறவு நிறுவனம், தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கு கடன் அடிப்படையில் மருந்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என தனிநபர் தொழில்முனைவோர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. மதுரையில் முதல்வர் மருந்தகம் தனிநபர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் ராஜூ, பொருளாளர் ரகுபதி, மாவட்ட தலைவர் முத்துக்குமார், செயலாளர் வினோத் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள், 'ஜெனரிக்' பொதுப் பெயரில் மட்டுமே இருக்க வேண்டும். முதல்வர் மருந்தகத்தில் 2000க்கும் அதிகமான மருந்துகள் கிடைக்கும் வகையில் மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் அவசர தேவைக்கு முதல்வர் மருந்தகங்களில் கொள்முதல் செய்ய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். விற்பனை அதிகரிக்க, அரசு பணியாளர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தொழிற்சாலை பணியாளர்களுக்கு மருந்துகளை முதல்வர் மருந்தகம் மூலம் கடன் அடிப்படையில் வழங்கி, சம்பளத்தில் பிடித்தம் செய்து மருந்தகத்திற்கு வழங்கும் திட்டம் வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை