உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொழிற்சாலைகள் உரிமத்தை ஆன்லைனில் தான் புதுப்பிக்கணும் தொழிலக பாதுகாப்பு அதிகாரி தகவல்

தொழிற்சாலைகள் உரிமத்தை ஆன்லைனில் தான் புதுப்பிக்கணும் தொழிலக பாதுகாப்பு அதிகாரி தகவல்

மதுரை: 'தொழிற்சாலைகள் உரிமத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே புதுப்பிக்க வேண்டும்' என மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: மதுரை மண்டலத்தில் உள்ள மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏற்கனவே பதிவு பெற்ற தொழிற்சாலைகள், புதிதாக பதிவு செய்யும் தொழிற்சாலைகள், புதிதாக மேம்படுத்தப்பட்ட https://dish.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் தங்கள் தொழிற்சாலை விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே 2026ம் ஆண்டுக்கு உரிமம் புதுப்பிக்க முடியும். தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலம் அபராதம் இன்றி புதுப்பிக்க அக். 31 கடைசி நாள். பதிவேற்றம் செய்த உடனேயே தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்கப்பட்டு, இணையதள வழிமுறையிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிம திருத்தம், உரிமமாற்றத்திற்கும் இணையதள வழிமுறையில் விண்ணப்பித்து அதற்கான கட்டணம், ஆதாரங்களை இணையம் மூலமே சமர்ப்பித்து திருத்திய உரிமத்தை இணையதள வழியிலேயே பெறலாம். விவரங்களுக்கு மாவட்ட தொழிலக பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை