உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண் தான தேவை அதிகரிப்பு விழிப்புணர்வு விழாவில் தகவல்

கண் தான தேவை அதிகரிப்பு விழிப்புணர்வு விழாவில் தகவல்

மதுரை: ''கண்தானத்தின் தேவை அதிகரித்து வருகிறது'' என மதுரை அரசு மருத்துவமனை கண் வங்கி சார்பில் நடந்த தேசிய கண்தான விழிப்புணர்வு விழாவில் துறைத்தலைவர் கவிதா தெரிவித்தார். டீன் அருள் சுந்தரேஷ்குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கவிதா கூறியதாவது: 2016 ம் ஆண்டில் 106 பேர் கண்தானம் செய்த நிலையில் தற்போது 382 பேரிடம் கண்தானம் பெறப்பட்டுள்ளது. மாதம் 12 பேருக்கு கண்தான அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பிறவியிலும் பல்வேறு விபத்துகளின் போதும் பார்வையிழப்பு ஏற்படுகிறது. பார்வையிழப்புக்கு கருவிழி மட்டுமே காரணம் எனில் கருவிழியை மாற்றினால் மீண்டும் பார்வை கிடைக்கும். இதற்காக கண் தானம் அதிகளவில் தேவைப்படுகிறது. இறந்தவர்களிடம் இருந்து கண்தானம் பெறுகிறோம். குடும்பத்தில் யாராவது இறந்தால், மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தால் உடனே வீட்டுக்கே வந்து கண்களை தானமாக பெற்றுச் செல்வோம். முகத்தில் மாறுபாடு எதுவும் தெரியாது. கண்தானம் செய்ய விரும்புவோர் போட்டோ, ஆதார் நகல், அலைபேசி எண்ணுடன் கண்தான பிரிவை அணுகலாம் என்றார். டாக்டர் சங்கீதா ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை