புத்தாக்க நிகழ்ச்சி
மதுரை; மதுரை அல்ட்ரா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் முதலாண்டு மாணவர்களுக்கு துவக்க விழா, முதல்வர் சீனிவாச ராமன் தலைமையில் நடந்தது. கல்விக் குழும தாளாளர் ஆறுமுகம், கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சுப்ரமணியன், பெஸ்ட் பல்மருத்துவ கல்லுாரி முதல்வர் மாலதி தயாளன் நேர்காணலுக்கு தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வது, தற்கால தொழில்நுட்பங்கள் வேலைவாய்ப்பில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து பேசினர். இயந்திர வியல் துறைத் தலைவர் ராம்குமார் நன்றி கூறினார். துணை முதல்வர் சிவசங்கரி உட்பட பங்கேற்றனர்.