மாற்றுத் திறனாளிகளுக்கு வரிவிலக்கு வலியுறுத்தல்
மதுரை: மதுரையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகக் குழுக்கூட்டம் மாநில தலைவர் மாயகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. செயலாளர் மாசிலாமணி, பொருளாளர் சைனுலாபுதீன், துணைத் தலைவர்கள் ரகமத்துல்லா, கார்த்திகேயன், துணைச் செயலாளர்கள் சரவணா, அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர்கள் அப்துல்ரஹ்மான் கபீர், ரவிக்குமரன், ராஜசேகரன், செல்வராஜ் பங்கேற்றனர். மதுரை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்களில் சாய்வுதளம், கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். வருமான வரியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு முழுவிலக்கு தரவேண்டும், சுங்கச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிபந்தனையற்ற கட்டண விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.