உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வயல் விழா

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வயல் விழா

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தோட்டக்கலை துறை சார்பில் அச்சம்பத்து இயற்கை விவசாயி சரவணன் தோட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கோவை மற்றும் உலக காய்கறிகள் நிறுவனம் தைவான் சார்பில் தக்காளி செடிகளில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வயல் விழா, செயல் விளக்க முகாம் நடந்தது.பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் சாந்தி, பயிர் நோய்கள் துறை பேராசிரியர் கார்த்திகேயன், பூச்சியியல் துறை பேராசிரியர் முருகன், இணை பேராசிரியர் சண்முகம், திருப்பரங்குன்றம் தோட்டக்கலை உதவி இயக்குனர் கோகிலா சக்தி பேசினர். ஒட்டுரக தக்காளி பயிரிடுவதன் மூலம் 100 சதவீத புழு தாக்குதலை குறைப்பது, பல பயிர் பாதுகாப்பு முறைகளை கையாள்வதன் மூலம் பூச்சி மருந்து செலவுகளை குறைத்தல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதால் பூச்சி மருந்துகளை குறைவாக பயன்படுத்துதல், நோய் கட்டுப்பாட்டு முறைகள் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை