உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சித்திரை வீதிகளில் அனைத்து வசதிகளும் கிடைக்க ஒருங்கிணைந்த திட்டப்பணி

சித்திரை வீதிகளில் அனைத்து வசதிகளும் கிடைக்க ஒருங்கிணைந்த திட்டப்பணி

மதுரை: மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதிகளில் அமைச்சர் தியாகராஜன் நேற்று ஆய்வு செய்தார். பொது கழிப்பறை, மேல கோபுர வீதியில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். கழிவு நீர் சித்திரை வீதியில் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.அவர் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் தவறாக செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சித்திரை வீதிகளில் தொலை நோக்கு பார்வையின்றி கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை திருத்திக்கொண்டு வருகிறோம். மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு சித்திரை வீதிகளில் குடிநீர், கழிப்பறை, பாதாளசாக்கடை, சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மக்களுக்கு கிடைக்க ஒருங்கிணைந்த திட்டப்பணியை செயல்படுத்திட உள்ளோம்.கோயில் யானை பார்வதி நலனில் தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். கண்புரை சிகிச்சைக்காக தொடர்ந்து நிபுணர்கள் குழு கண்காணிப்பில் உள்ளது. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் ஸ்மார்ட் சிட்டி பார்க்கிங் சென்று அடைய வழிமுறைகள் இன்றி அமைக்கப்பட்டதை மாற்றம் செய்து வாகனங்கள் அங்கு எளிதில் சென்று அடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்றார்.மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, நகர் நல அலுவலர் இந்திரா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை