உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போதையில் சிறுவன் கொலை

போதையில் சிறுவன் கொலை

சோழவந்தான்:மதுரை மாவட்டம் திருவேடகம் பழைய காலனி ஆறுமுகம் மகன் அய்யனார், 44; இவரது மனைவி உமா. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கணவன் மற்றும் இரு மகள்களை பிரிந்து, அதே பகுதி முத்துசாமி மகன் விவேக் உடன் ஊரை விட்டு சென்றார். இதனால் முத்துசாமி குடும்பத்துடன் அய்யனார் அடிக்கடி தகராறு செய்து வந்தார். மது போதையில், முத்துசாமியின் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்ற அய்யனார், அவரது மனைவி தவமணி, மகள் வழி பேரன் விஷ்ணு, 7, ஆகியோரை கத்தியால் வெட்டி விட்டு தலைமறைவானார்.இதில், மூவரும் படுகாயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் விஷ்ணு நேற்று காலை இறந்தார். அய்யனாரை சோழவந்தான் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை