உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கழிவுநீர் கால்வாயான பாசன கால்வாய்

கழிவுநீர் கால்வாயான பாசன கால்வாய்

மேலுார்: மேலுார் பெரியாறு பாசன கால்வாயில் வீடு, நகராட்சி கழிப்பறை தண்ணீர் கலப்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கள்ளந்திரி முதல் குறிச்சிபட்டி வரை 12 வது பிரதான கால்வாய் வழியாக பெரியாறு ஒரு போக பாசன கால்வாய் தண்ணீர் செல்கிறது. இதில் நொண்டி கோவில் பட்டியில் பிரியும் 6வது கால்வாய் கொட்டகுடிக்கும், மார்க்கெட் அருகே பிரியும் 6ஏ கால்வாய் வண்ணாம்புறை பட்டி வரையும் செல்கிறது. இக் கால்வாயில் செல்லும் தண்ணீரால் பத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிறைந்து அதன் மூலம் 1200 ஏக்கர் பயன்பெறும். இதில் நகராட்சியில் பல பகுதிகளிலிருந்து கழிவு நீர் கலப்பதால் சுகாதாரம் சுத்தமாக கிடையாது. விவசாயி ஸ்டாலின் கூறியதாவது: பெரியாற்றுக்கால்வாய் அருகில் குடியிருப்பவர்கள் வீட்டு கழிவு மற்றும் செப்டிக் டேங்க் தண்ணீரையும், நகராட்சி கழிப்பறைகளின் கழிவு நீரையும் குழாய் மூலம் கால்வாயில் வெளியேறுமாறு அமைத்துள்ளனர். அதனால் தண்ணீர் நிறம் கருப்பாகவும், துர்நாற்றமாகவும், கழிவுகள் நிறைந்தும் உள்ளது. கால்வாயில் வரும் தண்ணீரை கண்மாய் மற்றும் வயல்களுக்கு பாய்ச்சுவதால் மகசூல் குறைவதோடு, விளைவிக்கக்கூடிய நெல்லும் ஆரோக்கியமற்றதாக கிடைக்கும் என்பதால் நகராட்சி மற்றும் நீர்வளத் துறையினர் இணைந்து கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், கால்வாயில் கழிவுநீர் கலப்பதை நிறுத்தகோரி நகராட்சி கமிஷனருக்கு கடிதம் எழுதி யுள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி