| ADDED : அக் 20, 2024 06:58 AM
அவனியாபுரம் : ''துணை முதல்வர் உதயநிதி அவரது கட்சி சின்னத்தை டி சர்ட்டில் அணிந்து அரசு நிகழ்ச்சியில் அடையாளப்படுத்துவது ஏற்புடையது அல்ல'' என பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிம் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக துார்தர்ஷன் நிறுவனமே ஏற்று வருத்தம் தெரிவித்த பிறகு கூட அதை கவர்னரோடு ஒப்பிட்டு தி.மு.க., தலைவர் அரசியல் செய்கிறார். வெள்ள நிவாரண பணியின் தோல்வியை மறைக்க, மக்களிடத்தில் உள்ள வெறுப்பை புறம் தள்ளுவதற்கான செயல்தான் கவர்னருக்கு எதிரான பிரசாரம். ஒவ்வொரு முறையும் வெள்ள நிவாரண பணிகள் குறித்து முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் கேட்கும்போது, இதை அரசியல் செய்ய வேண்டாம் என சொல்கிறார்கள். இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது அப்போதைய முதல்வர் பழனிசாமி அரசியல் செய்யாதீர்கள் என கூறியதற்கு இவர்கள், நாங்கள் அவியல் செய்வதற்காகவா கட்சி நடத்துகிறோம் என்று சொன்னவர்கள்தான். துணை முதல்வர் உதயநிதி, உதயசூரியன் சின்னத்தை டி சர்ட்டில் அணிந்து அரசு நிகழ்ச்சிக்கு வரும் போது கட்சியை விளம்பரப்படுத்தி, எனது கட்சிக்கு ஓட்டளித்தவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் அரசின் திட்டங்களை கொண்டு செல்வேன் என்பதை சொல்லும் விதமாகத்தான் தெரிகிறது. அவர் கட்சி சின்னத்தை அடையாளப்படுத்துவது ஏற்புடையது அல்ல என்றார்.