உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சொல்லி 5 மாதமாச்சு இன்னும் இழுக்குது...

 சொல்லி 5 மாதமாச்சு இன்னும் இழுக்குது...

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி ஜூலை 2023ல் துவங்கியது. சந்தை திடலுக்குள் இருந்து கூடுதல் இடம் கையகப்படுத்துவது தாமதமானதால் நகராட்சி பகுதி தரைத்தளத்தை மட்டும் சரிசெய்து 45 நாட்களில் திறப்போம் என கடந்த ஜூலை 1ல் நடந்த நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் கமிஷனர் இளவரசன், பொறியாளர் சசிகுமார் தெரிவித்தனர். இதற்கு கவுன்சிலர்கள், '2 மாதங்கள் கூட எடுத்துக் கொள்ளுங்கள். பணிகளை முடித்து பஸ் ஸ்டாண்ட் திறக்க ஏற்பாடு செய்யுங்கள். பஸ் ஸ்டாண்டிற்குள் அத்தியாவசியமானவற்றுக்கு மட்டும் இடம் ஒதுக்கி திறக்க வேண்டும். கடைகள் ஒதுக்கப்படும் பட்சத்தில் அந்த இடத்திற்கு மேல் ஆக்கிரமிப்பு கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்' என்றனர். இக்கூட்டம் நடந்து 5 மாதங்களான நிலையில் புதுப்பிக்கும் பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. மழைக்காலம் துவங்கிய நிலையில் தற்காலிக பஸ்ஸ்டாண்டில் பயணிகள் ஒதுங்கி நிற்கக்கூட இடமின்றி மக்கள் அவதியுறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !