ஜல்லிக்கட்டு ஆலோசனை
திருப்பரங்குன்றம்: தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பில் திருப்பரங்குன்றத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வினோத், மாநில நிர்வாகிகள் சிவா, ஜாபர் அலி முன்னிலை வகித்தனர். அலங்காநல்லுார் கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கில் ஏப்.27ல் ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக நடத்துவது. அனைத்து காளைகளுக்கும் பரிசுகள்வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் ஜெயந்தன், சதீஷ், நிர்மல், சரவணன் பங்கேற்றனர்.