உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பணியிடங்களில் புகார் குழு கட்டாயம் தொழில்துறை இணை இயக்குநர் உத்தரவு

பணியிடங்களில் புகார் குழு கட்டாயம் தொழில்துறை இணை இயக்குநர் உத்தரவு

மதுரை: பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை விசாரிக்க 'உள்ளக புகார் குழு' கட்டாயம் அமைக்க வேண்டும் என மதுரை தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத் துறை இணை இயக்குநர் வேல்முருகன் அறிவுறுத்தியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து காக்கவும், புகார்களுக்கு தீர்வு காணவும், 'பணியிடத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல், தடை செய்தல், தீர்வு காணுதல்) சட்டம் - 2013' இயற்றப்பட்டது. இதன்படி 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் அனைத்து பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை விசாரிக்க உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும். தவறினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இயங்கிவரும் அனைத்து தொழிற்சாலைகள், கட்டுமானப் பணியிடங்களில் உடனடியாக உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும். குழுவின் உறுப்பினர்கள் குறித்த விவரங்கள், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான தீர்வு காணும் வழிமுறைகளை அனைத்து பணியாளர்களும் தெளிவாக பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை