உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மரங்களை அறியும் பயணம்

மரங்களை அறியும் பயணம்

மதுரை : மதுரை தானம் அறக்கட்டளை மற்றும் மதுரை கிரீன் அமைப்பு சார்பில் டி.வாடிப்பட்டி தர்மராஜன் கோட்டை பால தண்டாயுதபாணி கோயில் மலை அடிவாரத்தில் மரங்களை பார்வையிடும் நடை பயணம் நடந்தது. அமெரிக்கன் கல்லுாரி, சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, மதுரை காமராஜ் பல்கலை மாணவர்கள், ஆனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஹரிபாபு கலந்து கொண்டனர்.கோயில் வரலாறு குறித்து பரம்பரை அறங்காவலர் முருகேசன் தெரிவித்தார். மதுரை கிரீன் ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் வரவேற்றார். கோயில் மரங்களின் பெயர், அவை எங்கிருந்து வந்தன, மருத்துவ குணங்கள் குறித்து தாவரவியல் துறை பேராசிரியர் ஸ்டீபன் கூறினார். அரிய வகையான எட்டி மரம், வாகை மரம், கருக்குவாச்சி பனைமரம், மூங்கில், லெமன் கிராஸ் புல் வகைகள் நடை பயண உறுப்பினர்களுக்கு காண்பிக்கப் பட்டது. அரசு மாணவர் விடுதி காப்பாளர் (ஓய்வு) பிச்சைநன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் வாசுநாதன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ