| ADDED : நவ 15, 2025 05:57 AM
மதுரை: ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நவ. 28 - டிச. 12 வரை மதுரை, சென்னையில் நடக்க உள்ளது. வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை, சென்னையில் இருந்து எடுத்து வரப்பட்டு ராமநாதபுரம், சிவகங்கை வழியாக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தை வந்தடைந்தது. இன்று (நவ. 15) காலை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இருந்து எடுத்து வரப்படும் உலகக்கோப்பை, காலை 9:00 மணிக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயில் அம்மன் சன்னதி அருகே உள்ள மேடையில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் முன்னிலையில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. அங்கிருந்து ஊர்வலம் தொடங்கி விளக்குத்துாண், தெப்பக்குளம் சுற்றி குருவிக்காரன் சாலை வழியாக, ஆவின் சந்திப்பு, வக்போர்டு கல்லுாரி, அண்ணாநகர் வளைவு வழியாக காலை 11:30 மணிக்கு மீண்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம் வந்தடைகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதுநிலை மண்டல மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, விடுதி மேலாளர் முருகன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.