ஒரு போன்போதுமே
பாலத்தை சரிசெய்கமதுரை தெற்குவாசல் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு பள்ளங்கள் நிறைய உள்ளன. அதில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். பாலத்தின் கீழே சர்வீஸ் ரோடும் மோசமாக இருக்கிறது. மகாளிப்பட்டி செல்வோர் சிரமத்திற்குள்ளாகின்றனர். ரோட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- --சுந்தரமூர்த்தி, திருப்பதி நகர்.குப்பையை எடுங்கஉசிலம்பட்டி அரசு மருத்துவமனை சர்வீஸ் ரோட்டில் உள்ளேயும், ரோட்டின் வெளிப்பகுதியிலும் ஒரு வாரமாக குப்பை அகற்றப்படவில்லை. கழிவுகள் காற்றில் பறந்து ஆங்காங்கே கிடக்கின்றன. அப்பகுதியில் வசிப்போருக்கும், வியாபாரம் செய்வோருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தினகரன், உசிலம்பட்டிபோக்குவரத்து நெரிசல்வாடிப்பட்டி பஸ்ஸ்டாண்ட் பின்புறம் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வெள்ளை நிற கோடுகள் போடப்பட்டு ஆம்புலன்ஸ், உட்பட வாகனங்கள் சென்றன. தற்போது அக்கோடுகளை அழித்து விட்டதால் அதன்மீது அரசு பஸ்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் மருத்துவமனை செல்ல மீண்டும் இடையூறு, நெரிசல் ஏற்படுகிறது. மீண்டும் கோடு போட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.--- கவுரிநாதன், தென்கரை.சுத்தமான நீர் கிடைக்குமாமதுரை எச்.எம்.எஸ்., காலனி, ராமலிங்க நகர் மெயின் ரோடு பகுதிகளில் எட்டு மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. பல முறை கூறியும் நடவடிக்கை இல்லை. தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -- நாகமணி, எச்.எம்.எஸ்., காலனி.