மேலும் செய்திகள்
ஒரு போன் போதுமே..!
25-Aug-2025
வீணாகும் குடிநீர் மதுரை பொன்மேனி பஸ் ஸ்டாப் அருகே குழாய் உடைந்து குடிநீர் கழிவு நீருடன் கலந்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக் கேடு உண்டாகிறது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - இளங்கோவன், பைபாஸ் ரோடு. திறந்தநிலையில் வடிகால் மதுரை மகால் ரோட்டில் மழைநீர் வடிகால் துார்வாருவதற்காக தோண்டியபோது, குடிநீர் இணைப்புகள் சேதமாகி விட்டன. துார்வாரும் பணிகள் பாதியில் நிற்பதால், ஏழு அடி ஆழத்திற்கு பள்ளம் திறந்த வெளியில் உள்ளது. மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - வினோத், மகால் ரோடு . சுகாதாரக்கேடான கால்வாய் எல்லீஸ் நகர் குடும்பக்கட்டுப்பாடு அலுவலகம் அருகே உள்ள கிணற்றில் மாநகராட்சி, தனியார் கழிவுநீர் வாகனங்கள் கழிவை கொட்டுகின்றன. அருகில் உள்ள குடியிருப்புகளில் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு உண்டாகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பூமிநாதன், எல்லீஸ் நகர். மோசமான ரோடு மதுரை முனிச்சாலை முதல் அனுப்பானடி வளைவு வரை 2 கி.மீ. துாரத்திற்கு ரோடு மிக மோசமாக உள்ளது. மழை நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. ரோட்டை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - நீலகண்டன், கீழவாசல். மூடப்படாத பள்ளம் மதுரை அவனியாபுரம் காவேரி தெருவில் யாரும் செல்ல முடியாத வகையில் தோண்டிய பள்ளம் இன்னும் மூடப்படவில்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - குமார், அவனியாபுரம். கொசு உற்பத்தி கால்வாய் தாசில்தார் நகர், மருதுபாண்டியர் தெரு அருகிலுள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் அருகில் வசிக்கும் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - நாகசுப்பிரமணியன், மருதுபாண்டியர் தெரு. தேங்கும் கழிவுநீர் மதுரை நடராஜ் நகர், எடிசன் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் கவனிப்பார்களா. - செண்பகவேல், நடராஜ் நகர். கோயிலைச் சுற்றி குப்பை மதுரை கூடலழகர் கோயிலைச் சுற்றி குப்பை நிறைந்துள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். - லெட்சுமணன் மணி, எஸ்.எஸ்.காலனி.
25-Aug-2025