காவி கலர் கயிறு கட்டினால்கூட கைதா காடேஸ்வரா சுப்பிரமணியன் கண்டனம்
மதுரை: மதுரையில் காவி கலர் கயிறு கட்டினால் கூட தேடி சென்று போலீசார் கைது செய்தனர் என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது: முருகன் மலையை காப்பாற்ற ஹிந்து முன்னணி தலைவர்கள், முருக பக்தர்கள் என அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. காவி கலரில் கையில் கயிறு கட்டியவர்களை தேடி சென்று போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகியிருந்தோம்.முருகன் மலையை காப்பாற்ற இது முதற்கட்ட போராட்டம். திருப்பரங்குன்றம் மலையில் மீது தீபம் ஏற்ற வேண்டும். முருகன் மலையை காப்பாற்ற வேண்டும் என்றார்.