உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கந்த சஷ்டி திருவிழா அதிகாரிகள் ஆலோசனை

கந்த சஷ்டி திருவிழா அதிகாரிகள் ஆலோசனை

திருப்பரங்குன்றம்: திருப்பங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா குறித்து அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருமங்கலம் ஆர்.டி.ஓ., கண்ணன், கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன், போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி, மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா, தாசில்தார் கவிதா, தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார், மின் உதவி பொறியாளர் சுமங்களா தேவி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பஞ்சவர்ணம், மதுரைவீரன், மாநகராட்சி உதவி பொறியாளர் இளங்கோ, வி.ஏ.ஓ. முகமது அப்பாஸ், கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்கள் சுவாமிநாதன், சண்முகசுந்தரம் பங்கேற்றனர். அடிப்படை வசதிகள், சுவாமி புறப்பாட்டிற்கான பாதுகாப்பு, கோயிலில் தங்கி விரதமிருக்கும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, குடிநீர், சாலை, பொது சுகாதாரம், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ