கராத்தே மாஸ்டர் பயிற்சி முகாம்
திருப்பரங்குன்றம்: காஞ்சிபுரத்தில் 5 நாட்கள் இன்டர்நேஷனல் கட்டா பயிற்சி மற்றும் கராத்தே நவீன யுக்திகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. அமெரிக்க மாஸ்டர் ஜெரார்டோ க காண்டோர் பயிற்சி அளித்தார். மதுரை கார்த்திக், இலங்கை யசோதரன், கும்பகோணம் மணிகண்டன், சென்னை ஜெயராஜ், கோவை மகேஸ்வரன் உள்பட 500 க்கும் மேற்பட்ட மாஸ்டர்கள் பங்கேற்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.