கத்தி போடும் விழா
சோழவந்தான்: காடுபட்டியில் உடம்பில் கத்தி போடும் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இங்குள்ள காளியம்மன், மாரியம்மன், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் திருவிழா (மே 16) வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.நேற்று (மே 21) மன்னாடிமங்கலம் வைகை ஆற்றில்இருந்து கரகம் எடுத்து வரப்பட்டது. அப்போது பக்தர்கள் கத்திகளால் தங்களை அடித்தபடியே காடுபட்டி வரை ஊர்வலமாக சென்றனர்.ஏற்பாடுகளை தேவாங்கர் உறவின் முறையினர் செய்தனர்.