உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கே.ஆர்.எஸ்., முன்னாள் மாணவர் சி.ஏ., இன்டர் தேர்வில் சாதனை

கே.ஆர்.எஸ்., முன்னாள் மாணவர் சி.ஏ., இன்டர் தேர்வில் சாதனை

மதுரை : மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் (கே.ஆர்.எஸ்.,) சி.பி.எஸ்.இ., பள்ளி முன்னாள் மாணவர் ஜெகதீஷ் சி.ஏ., இன்டர் தேர்வில் 529 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.மதுரை கோச்சடை ஜெகதீஷ், கே.ஆர்.எஸ்., சி.பி.எஸ்.இ., பள்ளியில் 2020 - 22ல் படித்தார். 2023 நவம்பரில் சி.ஏ., இன்டர் தேர்வு எழுதினார். நேற்றுமுன்தினம் அதற்கான முடிவு வெளியிடப்பட்டது. அதில் மொத்த மதிப்பெண் 800க்கு 529 மதிப்பெண் பெற்றார். இதன் மூலம் மாணவரின் தனிப்பட்ட முயற்சியுடன், பள்ளியில் அளிக்கப்படும் தரமான கல்விக்கும் சான்றாக அமைந்துள்ளது.முதல்வர் சூர்யபிரபா கூறுகையில், சி.ஏ., இன்டர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதன் மூலம் ஜெகதீஷின் சாதனையும், சிறந்த கல்வியை வழங்கும் பள்ளியின் அர்ப்பணிப்பும் வெளிப்பட்டுள்ளது. அவரின் வெற்றி தற்போது படிக்கும் மாணவர்களுக்கும் உத்வேகத்தை அளிக்கும். பள்ளி சார்பில் மாணவரை வாழ்த்துகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை