உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போக்குவரத்து துறையில் ஓட்டுனர்களுக்கு பாராட்டு

போக்குவரத்து துறையில் ஓட்டுனர்களுக்கு பாராட்டு

மதுரை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டலம் சார்பில் ஓட்டுனர்கள் தினம் கொண்டாடப்பட்டது. பெரியார் பஸ்ஸ்டாண்டில் நடந்த இந்நிகழ்ச்சியில் விபத்து இல்லாத, குறைந்த பெட்ரோலில் அதிக கி.மீ., ஓட்டிய ஓட்டுனர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மக்கள் தொடர்பு துறை பாஸ்கரன் வரவேற்றார்.பொது மேலாளர்கள் சமுத்திரம், ராகவன், துணை மேலாளர் முருகானந்தம், உதவி மேலாளர் யுவராஜ், கோட்ட மேலாளர்கள் முத்துராஜ், தயாளகிருஷ்ணன், மக்கள் தொடர்பு அதிகாரி சந்தானம், பெரியார் பஸ்ஸ்டாண்ட் மேலாளர் ரமேஷ், எல்லீஸ்நகர் மேலாளர் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். உதவி மேலாளர் பசுமலை நன்றி கூறனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ