மேலும் செய்திகள்
நுாபுர கங்கையில் நீராடிய சுந்தரராஜ பெருமாள்
03-Nov-2025
அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் 11 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில், நேற்று பாலாலய பூஜையுடன் திருப்பணிகள் துவங்கின. முருகனின் 6ம் படைவீடான இங்கு, 2014ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் நடைபெறுவதற்கு முன்னோட்டமாக நேற்று பாலாலயம் நடந்தது. அதிகாலை சஷ்டி மண்டபத்தில் வேத மந்திரங்களுடன் யாகசாலை பூஜைகள் நடந்தன. உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டது. வித்தக விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சன்னதிகள், வேல் சன்னதியில் பூஜைகள் நடந்தன. ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் 42 அடி ராஜகோபுரம், சுவாமி சன்னதிகளின் விமானங்களுக்கான திருப்பணிகள் துவங்கின. கோயில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், மேலாளர் தேவராஜ் பங்கேற்றனர்.
03-Nov-2025