மேலும் செய்திகள்
குன்றத்தில் பாலாலயம்
04-May-2025
குன்றத்து உப கோயில்களில் பாலாலயம்
05-May-2025
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேலுள்ள காசி விஸ்வநாதர் கோயில் உட்பட 5 உப கோயில்களுக்கு ஜூன் 8ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 14ல் நடக்கிறது. முன்னதாக உபகோயில்களான சொக்கநாதர் கோயில், பழநி ஆண்டவர் கோயில், பாம்பலம்மன் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயில்களில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்மதேவன், ராமையா செலவில் ஏப்.16ல் கும்பாபிஷேகம் நடந்தது.சரவணப் பொய்கை ஆறுமுக நயினார் கோயில், மலைக்குப் பின்புறம் பால் சுனைகண்ட சிவபெருமான் கோயில், சப்த கன்னிமார் கோயில்களுக்கு கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் மே 4ல் நடந்தது. ஜூன் 8ல் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், புதிய படிக்கட்டு விநாயகர் கோயில், சரவண பொய்கை ஆறுமுக நயினார் கோயில், பால் சுனைகண்ட சிவபெருமான்கோயில், சப்த கன்னிமார் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
04-May-2025
05-May-2025