உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் உப கோயில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம்

குன்றத்தில் உப கோயில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம்,: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்களான சொக்கநாதர் கோயில், பழநி ஆண்டவர் கோயில், அங்காள ஈஸ்வரி குருநாத சுவாமி கோயில், மாம்பலம்மன் கோயில், மலை மேல் காசி விஸ்வநாதர் கோயில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் சார்பில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ஆரம்ப கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. மாநில குழு 20 பணிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மூன்று பணிகளை நேரில் ஆய்வு செய்து அனுமதி அளிக்க உள்ளது.முன்னதாக ஐந்து உப கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை நானும், அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மதேவன், சண்முகசுந்தரம், ராமையா ஆகியோரும் சொந்த செலவில் மேற்கொள்ள உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை