உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  லட்சுமி பள்ளி வெள்ளிவிழா நடமாடும் காட்சியகம் துவக்கம்

 லட்சுமி பள்ளி வெள்ளிவிழா நடமாடும் காட்சியகம் துவக்கம்

மதுரை: மதுரை லட்சுமி பள்ளி வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு கல்விச் சாதனைகள் குறித்த நடமாடும் காட்சியகத்தை தொடங்கியுள்ளது. இப்பள்ளி தனது 25 ஆண்டுகால கல்விச் சாதனைகளை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் தனித்துவமான காட்சிப் பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், பள்ளியின் பாரம்பரியம், கல்வி, இணைப் பாடத்திட்டத்தில்மாணவர்களின் சாதனைகள், சமூக சேவை முயற்சிகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன. பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், ''இந்த நடமாடும் காட்சியகம் பள்ளியின் 25 ஆண்டுக்கால சாதனைகளைக் கொண்டாடும் நிகழ்வாக மட்டுமின்றி, மாணவர்கள் பெரிய, வித்தியாசமான கனவுகளை காண நம்பிக்கை அளிக்கும். ஒரு மாதத்திற்குநகரின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்ய உள்ளது'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை