உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்

அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்

மதுரை : மதுரை மாவட்டத்தில் பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத 4 அரசியல் கட்சிகள் 2019ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடவில்லை. இதுகுறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி அகில இந்திய தாயக மக்கள் முன்னேற்ற கட்சி, எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம், மனித உரிமைகள் கழகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் ஆகிய 4 கட்சிகளும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேதியில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசுச் செயலாளர் முன்பாக கட்சியின் தலைவர், பொதுச் செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை