| ADDED : நவ 28, 2025 07:53 AM
மதுரை: மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளம், சிங்கப்பூர் தமிழர் இயக்கம் சார்பில் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய விழா இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமையில் நடந்தது. நிறைவு விழாவில், சிங்கப்பூர் உமறுப்புலவர் கல்வி நிலைய தமிழாசிரியர் அன்பழகன் பேசினார். சிங்கப்பூர், மதுரை மாணவர்களுக்கு படைப்பாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. சிறுகதை பயிற்சியை எழுத்தாளர் வேணுகோபால், கவிதைக்கான பயிற்சியை எழுத்தாளர் சுடலைமணி, முன்னாள் பேராசிரியர் முத்து சந்தானம், நாடகப் பயிற்சியை அனீஸ், பிரபாகர் ஆகியோர் வழங்கினர். மதியம் பேச்சாளர் சுகிசிவம் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. மாலையில் முதன்மை கல்வி அலுவலர் தயாளன், தஞ்சை தமிழ் பல்கலை பேராசிரியர் குறிஞ்சிவேந்தன், இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலத் தலைவர் சாமிதுரை ஆகியோர் பேசினர். சங்க ஆய்வு வளமையர் ஜான்சிராணி ஒருங் கிணைத்தார்.