மேலும் செய்திகள்
உரிமை கோரப்படாத நிதி: காஞ்சியில் மீட்பு முகாம்
26-Oct-2025
மதுரை: மதுரையில் நீண்டகாலமாக உரிமை கோராத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகை, பங்குத்தொகை ஆகியவற்றை அதன் உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகளுக்கு ஒப்படைக்கும் முகாம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. இந்திய நிதிஅமைச்சக வழிகாட்டுதலில் நடந்த இம்முகாம், அனைத்து வங்கி காப்பீடு, இதர துறைசார்ந்த அலுவலக கிளைகளில் அக்.1 முதல் டிச.31 வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இம்முகாமின் நோக்கம் நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கிக் கணக்குகள், உள்வைப்புத் தொகை, காப்பீடு தொகைகள், பங்குகள், பிறநிதி சொத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் உரிமையாளர்கள் அல்லது அவர்களின் சட்ட வாரிசுகளுக்கு தங்கள் உரிமை கோரப்படாத நிதி சொத்துகளை மீட்க உதவுவதாகும். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.54.47 லட்சத்தை உரிய வாடிக்கையாளர்களிடம் கலெக்டர் வழங்கினார். ஐ.ஓ.பி., மண்டல அலுவலர் ரவீந்திரன், எஸ்.பி.ஐ., மண்டல அலுவலர் சட்டநாதன், இந்தியன் வங்கியின் நரேஷ்குமார் பரிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரசாந்த் துக்காராம் உட்பட பலர் பங்கேற்றனர்.
26-Oct-2025