உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அறுவடை நேரத்தில் மழையால் இழப்பு

அறுவடை நேரத்தில் மழையால் இழப்பு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே அறுவடை நேரத்தில் காற்றுடன் பெய்த மழையால் பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன. இப்பகுதி மேலசின்னனம்பட்டி, கள்வேலிபட்டி உள்பட சில இடங்களில் விவசாயிகள் போர்வெல் தண்ணீரை கொண்டு கோடை நெல் சாகுபடி செய்திருந்தனர். பயிர் வளர்ந்திருந்த வயல்களில் தற்போது அறுவடை நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை இப்பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மேலசின்னனம்பட்டியில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் அறுவடை துவங்கிய நிலையில் மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்த விவசாயிகள் 30 முதல் 40 மூடை கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தனர். மழையால் பயிர்கள் சாய்ந்ததால் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டம் அடைந்ததாக தெரிவித்தனர். அதிகாரிகள் நிவாரணம் தர வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை