உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் 27 லட்சம் வாக்காளர்கள் பெண்கள் 46 ஆயிரம் பேர் அதிகம்

மதுரையில் 27 லட்சம் வாக்காளர்கள் பெண்கள் 46 ஆயிரம் பேர் அதிகம்

மதுரை : மதுரை மாவட்ட வாக்காளர் வரைவு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 27 லட்சத்து 3 ஆயிரத்து 835 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்களைவிட பெண்கள் 45 ஆயிரத்து 836 பேர் கூடுதலாக உள்ளனர்.வாக்காளர் வரைவு பட்டியலை கலெக்டர் சங்கீதா வெளியிட்டார். அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 13 லட்சத்து 28 ஆயிரத்து 854 பேர், பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 74 ஆயிரத்து 690 பேர், மூன்றாம் பாலினத்தவர் 291 பேர் உள்ளனர்.புதிதாக விண்ணப்பிக்க, தொகுதி மாற படிவம் 6, வெளிநாடு வாழ் இந்தியர் பதிவு செய்ய படிவம் 6ஏ, வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க படிவம் 6 பி, பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு குறித்த ஆட்சேபனைக்கு படிவம் 7, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம்,நகல் அட்டை பெற படிவம் 8 ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.2025 ஜன.1ல் 18 வயது பூர்த்தி அடைவோர் புதிய வாக்காளராக பதிவு செய்யலாம். அக்.29 முதல் நவ.28 வரை வாக்காளர்கள் தங்கள் பதிவை தாலுகா, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில், ஓட்டுச்சாவடிகளில் சரிபார்த்துக் கொள்ளலாம். படிவங்களை பெற்று பூர்த்தி செய்தும் வழங்கலாம். இணையதள முகவரி (https://voters.eci.gov.in) அல்லது அலைபேசியில் வாக்காளர் உதவி எண் என்ற செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம்.வாக்காளர் சேர்க்கைக்காக சிறப்பு முகாம்கள் நவ.16, 17, 23, 24ல் ஓட்டுச்சாவடிகளில் நடக்க உள்ளன. விண்ணப்பத்துடன் வயது, முகவரிக்கான ஆவணங்கள், ஆதார் நகலை இணைக்க வேண்டும். விவரங்களுக்கு இலவச தொலைபேசி எண் 1950. விண்ணப்ப படிவங்களை பரிசீலித்து 2025 ஜன.6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை