உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தளபதி மீது மீண்டும் நில அபகரிப்பு புகார்

தளபதி மீது மீண்டும் நில அபகரிப்பு புகார்

மதுரை : மதுரை தி.மு.க., நகர செயலாளர் தளபதி மீது போலீஸ் எஸ்.பி., ஆஸ்ரா கர்க்கிடம் மீண்டும் நில அபகரிப்பு புகாரை ஓய்வு பெற்ற மில் தொழிலாளி கூறியுள்ளார்.மதுரை தியாகராஜர் காலனியை சேர்ந்த கழுவத்தேவர். இவர், எஸ்.பி.,யிடம் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: மீனாட்சி மில்லில் 1946ல் வேலைக்கு சேர்ந்தேன். தியாகராஜர் காலனியில் வாடகைக்கு வீடு ஒதுக்கினர். மாதம் பத்து ரூபாய் வாடகை செலுத்தினேன். பின், மீனாட்சி மில் நிர்வாகம் சார்பில் 1986ல் வீடுகளை விற்பனை செய்வதாக அறிவித்தனர். இதன்படி, நான், குடியிருக்கும் வீட்டை விலைக்கு வாங்குவதற்காக 15 ஆயிரத்து 20 ரூபாய் முன்பணம் கட்டினேன். பாக்கியை மூன்று தவணைகளில் கட்ட வேண்டும் என்றனர். அதற்கு நான் சம்மதித்தேன். 1986ல் ஓய்வு பெற்றேன். ஓய்வூதிய பணத்தில் இருந்து ஒரு பங்கு பணம் வீட்டிற்காக எடுத்து கொண்டனர். சில மாதம் கழித்து பாக்கியை செலுத்த சென்றபோது வாங்க மறுத்தனர். எனினும், அதே வீட்டில் குடியிருந்து வந்தேன்.எனக்கும், என்னை போல் உள்ள தொழிலாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டையும், இடத்தையும் சட்ட விரோதமாக தி.மு.க., நகர செயலாளர் தளபதி, அவரது நண்பர் ஆறுமுகசாமி வாங்கினர். இதை எதிர்த்து, மதுரை ஐகோர்ட் கிளையில் இடைக்கால தடை கேட்டு மனு தாக்கல் செய்தேன். தளபதி, ஆறுமுகச்சாமி உத்தரவுப்படி, கிருஷ்ணபாண்டி, ராமர், ரவிச்சந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் என் மீது கூலிப்படையை ஏவினர். தியாகராஜர் காலனிக்கு எதிரில் உள்ள எனது கடையை அடித்து நொறுக்கினர். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை