உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெல்லை எக்ஸ்பிரசில்இன்ஜின் கோளாறு

நெல்லை எக்ஸ்பிரசில்இன்ஜின் கோளாறு

மதுரை:சென்னை- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியை கடந்து வந்து கொண்டிருந்தது. மணப்பாறை - கொளத்தூர் இடையே நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது. மதுரை - விழுப்புரம் ரயில் மணப்பாறையில் நிறுத்தப்பட்டு, அதன் இன்ஜின் சென்னை - நெல்லை ரயிலில் இணைக்கப்பட்டு புறப்பட்டது. இதனால், மதுரைக்கு காலை 5.30 மணிக்கு வர வேண்டிய நெல்லை ரயில் காலை 7.30க்கும், காலை 6.30 க்கு வர வேண்டிய பாண்டியன் காலை 8க்கும் வந்தது. திருச்சியில் இருந்து மாற்று இன்ஜின் வர வழைக் கப்பட்டு மதுரை - விழுப்புரம் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 4.30க்கு புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ