உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவுக்கு மூடு விழா?

ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவுக்கு மூடு விழா?

மதுரை : கடந்தாட்சியில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., ஜாபர்சேட்டால் உருவாக்கப்பட்ட, ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு மூடுவிழா காண போவதாக வெளியான தகவலால், அப்பிரிவு போலீசார் விரக்தியில் உள்ளனர். இதன் காரணமாக, உயர் அதிகாரிகளுக்கு முன்கூட்டி தகவல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.,யின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் மாவட்டந்தோறும் எஸ்.பி.சி.ஐ.டி., எனும் உளவுப்பிரிவு இயங்குகிறது. அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்னைகளுக்கு மட்டும் இப்பிரிவு முக்கியத்துவம் தரும். கஞ்சா விற்பனை, பணமோசடி போன்ற குற்றங்களை தடுக்க, கடந்தாட்சியில் மாவட்டங்களில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் இப்பிரிவு துவங்கப்பட்டது.போதை, கஞ்சா விற்பனையை முன்கூட்டி கண்டறிவது, ஹவாலா மோசடி, கள்ளநோட்டு கும்பலை நோட்டமிடுவது, கட்ட பஞ்சாயத்து, ரவுடி குறித்த விபரங்களை தெரிவிப்பது, தகவல் தொழில்நுட்ப குற்றங்களையும் கட்டுப்படுத்துவது உட்பட அனைத்து குற்றங்களையும் முன்கூட்டி யூகித்து தகவல் தெரிவிப்பது இப்பிரிவின் பணி.ஆட்சி மாற்றத்திற்கு பின், ஜாபர் சேட் துவங்கினார் என்ற காரணத்திற்காக இப்பிரிவை கலைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு ஏற்றாற்போல், இதுவரை இப்பிரிவுக்கு கம்ப்யூட்டர் உட்பட உபகரணங்கள் வழங்கப்படவில்லை. இவர்கள் தரும் தகவல்களுக்கும் முக்கியத்துவம் தருவதில்லை. தற்போது மாநில அளவில் கூடுதல் எஸ்.பி., தலைமையில் இப்பிரிவு இயங்குகிறது.போலீசார் கூறியதாவது :இப்பிரிவு துவங்கியபோது, அனைத்து விபரங்களையும் உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து, குற்றங்களை கட்டுப்படுத்தியதுடன், சட்டம் ஒழுங்கும் காப்பாற்றப்பட்டது. தற்போது இப்பிரிவு கலைக்கப்படலாம் என்பதால், தகவல் சேகரிப்பதில் போலீசாரிடம் ஆர்வம் இல்லை. விருப்பப்பட்ட பிரிவுகளில் பணிபுரிய அனுமதி கேட்டு அதிகாரிகளுக்கு விண்ணப்பித்துள்னர், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி