உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேட்புமனு தாக்கல் செய்தவர் உட்பட 2 பேர் விபத்தில் பலி

வேட்புமனு தாக்கல் செய்தவர் உட்பட 2 பேர் விபத்தில் பலி

மேலூர் : வெவ்வேறு விபத்துக்களில், ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தவர் உட்பட இருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்கள். மேலூர் வண்ணாம்பாறைப்பட்டியை சேர்ந்தவர் பிச்சை,40. நேற்று காலை 7 மணியளவில் சிவகங்கை ரோட்டில் நடந்து சென்ற இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் வண்ணாம்பாறைப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். கீழவளவு போலீசார் விசாரித்து வருகின்றனர். மற்றொரு விபத்து: தனியாமங்கலத்தை சேர்ந்தவர் பிரபு ,30. இவர் நரசிங்கம்பட்டியில் உள்ள ஆர்.எம்.ஆர்., மேன் பவர் ஏஜன்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் 1.30 மணியளவில் நான்கு வழிச்சாலையில் மேலூர் நோக்கி மோட்டார் பைக்கில் சென்றுள்ளார் (ஹெல்மெட் அணியவில்லை). மேலூர் புறவழிச்சாலையில் பைக் திரும்பியபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரி கொண்டு வரப்பட்ட பிரபு இறந்தார். இன்ஸ்பெக்டர் மாடசாமி விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை