உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சேலம் மத்திய சிறையில் மதுரை கைதி சாவு

 சேலம் மத்திய சிறையில் மதுரை கைதி சாவு

சேலம்: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யம்பட்டியை சேர்ந்தவர் சந்திரமோகன், 43; சேலத்தில் கஞ்சா விற்றதால், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கடந்த ஆக., 7ல் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். ஜே.எம்.3 மாஜிஸ்திரேட் முத்துகிருஷ்ண முரளிதாஸ் விசாரணை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை