மேலும் செய்திகள்
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது
09-Nov-2024
மதுரை : மதுரையில் 17 வயது பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய ஷீரடி சாய்பாபா கோயில் நிர்வாகி சசிக்குமாரை 45, போலீசார் கைது செய்தனர்.மதுரை கண்ணனேந்தலைச் சேர்ந்த தொழிலாளியின் 17 வயது மகள், அரசு உதவிப்பெறும் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். வீட்டருகே உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு அடிக்கடி சக தோழியருடன் சென்று வந்தார். இந்நிலையில் வயிற்றுவலி காரணமாக ஸ்கேன் எடுத்து பார்த்தபோது 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. இதற்கு அந்த கோயில் நிர்வாகி சசிக்குமார்தான் காரணம் என மாணவியின் தாயார் தல்லாகுளம் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.புகாரில் கூறியுள்ளதாவது:பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்ததும் கோயிலுக்கு சென்று சக தோழியருடன் படிப்பார். கோயிலில் துாய்மைப்பணியிலும் ஈடுபடுவார். வயிற்றுவலி தொடர்பாக மகளை சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது 8 மாத கர்ப்பம் எனத்தெரிந்து அதிர்ச்சியடைந்தோம்.மகளிடம் கேட்டபோது, கோயில் நிர்வாகி சசிக்குமார்தான் காரணம். ஒன்றரை ஆண்டுகளாக மிரட்டி கோயில் மாடியில் இருக்கும் சசிக்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தாள்.இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என சசிக்குமார் மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் மகள் மறுத்தபோது 'கூப்பிடும்போது வர வேண்டும்.வரவில்லை என்றால் பெற்றோரிடம் இதுகுறித்து கூறிவிடுவேன்' என மிரட்டியுள்ளார்.இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.மனைவியுடன் வசிக்கும் சசிக்குமார், மாணவியை பலாத்காரம் செய்தது போலீஸ் விசாரணையில் உறுதியானது. அவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.மாணவியின் வழக்கறிஞர் மணிமாறன் கூறுகையில்,''சசிக்குமாரிடம் தல்லாகுளம் போலீசார் முழுமையாக விசாரிக்கவில்லை'' என்றார்.
09-Nov-2024