உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  டில்லியில் கோரிக்கை வைத்த மதுரை வியாபாரிகள்

 டில்லியில் கோரிக்கை வைத்த மதுரை வியாபாரிகள்

மதுரை: தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் டில்லி சென்ற சங்கத்தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூடுதல் செயலாளர் பங்கஜ்குமார் சிங்கை சந்தித்தனர். சந்திப்பு குறித்து அவர்கள் கூறியதாவது: அரிசி, பருப்பு, கோதுமை, தினை, மாவு, கரும்புவெல்லம், பனைவெல்லம் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யின் கீழ் இரட்டை வரி விகிதத்தை நீக்க கோரிக்கை வைத்தோம். ஈர இட்லிமாவு, கரும்பு, பனை வெல்லத்திற்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும். களிமண் செங்கலுக்கு உள்ளீட்டு (ஐ.டி.சி.) வரியுடன் 5 சதவீதம், காகிதத்திற்கு 5 சதவீத வரி விதிக்க வேண்டும். ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களின் போது விடுபட்ட சிலவகை உயிர் உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்கு 5 சதவீத வரி விதிக்க வேண்டும். ரயில் பார்சல் வழியாக மின்வழி ரசீது கட்டாயமாக்க வேண்டும். ஜி.எஸ்.டி.,யின் கீழ், கூட்டு வரித் திட்டத்தைத் தேர்வுசெய்ய உற்பத்தி பங்குதாரர்களை அனுமதிக்க வேண்டாம். காகிதப் பொருட்களுக்கான உள்ளீட்டு வரியை பங்குதாரர்களிடம் பெற்ற நிலையில் அதை திரும்ப வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவை ஜி.எஸ்.டி., கவுன்சில் கூடுதல் செயலாளர் பங்கஜ்குமார் சிங்கிடம் வழங்கினோம். மேலும் அடுத்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு முன், பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள், வர்த்தக அமைப்புகளுடன் பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்க கூட்டம் நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்தோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை