விட்டுவிட்டு பெய்த மழை ஜில்லென்று மாறிய மதுரை
மதுரை : மதுரை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்றும் மழை தொடர்ந்து பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.நகரில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. போக்குவரத்து பாதித்தது. நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கள்ளிக்குடி தாலுகாவில் ஒரு வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தொடர் மழையால் மதுரை 'ஜில்'லென இருந்தது. மழையளவு (மி.மீ.,யில்)
மதுரை வடக்கு - 55.6, தல்லாகுளம் 62.8, பெரியபட்டி 38.2, விரகனுார் 30.2, சிட்டம்பட்டி 36.2, கள்ளந்திரி 50, இடையபட்டி 49, தனியாமங்கலம் 45, மேலுார் 47, புலிப்பட்டி 70.4, வாடிப்பட்டி 45, சோழவந்தான் 54, சாத்தையாறு அணை 53, மேட்டுப்பட்டி 40, ஆண்டிப்பட்டி 38.1, உசிலம்பட்டி 60, குப்பணம்பட்டி 37, விமான நிலையம் 38.4, திருமங்கலம் 36.2, பேரையூர் 53.4, எழுமலை 41.2, கள்ளிக்குடி 14.6. அணைகளில் நீர்மட்டம்
பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.65 அடி (மொத்த உயரம் 152 அடி). அணையில் நீர் இருப்பு 2,756 மில்லியன் கனஅடி. அணைக்கு வினாடிக்கு 3153 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 105 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 49.67அடி (மொத்த உயரம் 71 அடி). அணையில் 1950 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1039 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.சாத்தையாறு அணையின் நீர்மட்டம் 19 அடி. (மொத்த உயரம் 29 அடி). அணையில் 24.54 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 65 கனஅடி தண்ணீர் வருகிறது.