மேலும் செய்திகள்
சின்னசேலத்தில் ஐம்பெரும் விழா
01-Apr-2025
மதுரை: மதுரையில் மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனை கவியரங்கம் 'மணம் கமழும்தமிழே;மனம் கவரும் தாயே' என்ற தலைப்பில் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் கவிஞர் இரா.ரவி வரவேற்றார். நிறுவனர் வீரபாண்டிய தென்னவன் மகன் வீரஆதிசிவம் தென்னவன், பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் இரா.வரதராஜன் முன்னிலை வகித்தனர். புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் வரதராஜன் வாழ்த்தி பேசினார். கவிஞர் பேரின்பநாதனின் பல்சுவைப் பாக்கள் என்ற கவிதை நுால் வழங்கப்பட்டது. கவிஞர் குறளடியான் எழுதிய யுகாதி நுால் வெளியிடப்பட்டது.புலவர்கள் முருகு பாரதி, ஆறுமுகம், குறளடியான், லிங்கம்மாள், முனியாண்டி, அஞ்சூரியா, ஜெயராமன், ஸ்ரீ வித்யாபாரதி, பொன்.பாண்டி, பாலகிருஷ்ணன், இதயத்துல்லா, பால் பேரின்பநாதன், சாந்தி, வீரபாகு, அரசி. தேவதர்சினி, ஹர்ஷா, சந்தோஷ், அபிராமி, வேல்பாண்டியன், நாகராஜன் ஆகியோர் கவிதை பாடினர். துணைச்செயலாளர் கங்காதரன் நன்றி கூறினார்.த.மு.எ.க.ச.பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், மண்டல கணக்கு அலுவலர்பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
01-Apr-2025