உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மனமகிழ் மன்றம்: உயர்நீதிமன்றம் தடை

மனமகிழ் மன்றம்: உயர்நீதிமன்றம் தடை

மதுரை; மதுரை கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் தலைவர் ராகவன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கோமதிபுரத்தில் தனியார் மனமகிழ் மன்றம் அமைக்க கட்டுமானப் பணி நடக்கிறது. அருகில் குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. மனமகிழ் மன்றத்தில் மது அருந்துவோரால் மக்களுக்கு இடையூறு ஏற்படும். அதற்கு உரிமம் வழங்க மதுவிலக்கு மற்றும் கலால்துறை கமிஷனர், கலெக்டருக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் ஆஜரானார். நீதிபதிகள், 'உரிமம் வழங்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. விசாரணை ஆக.18 க்கு ஒத்திவைக்கப்படுகிறது,' என உத்தரவிட்டனர். மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மது விற்பனை நடப்பது குறித்து பதிவுத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் பதிவுத்துறை ஐ.ஜி.,க்கு சம்மன் அனுப்ப நேரிடும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !