உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரோட்டை சீரமைக்க ேகாரி சந்தை வியாபாரிகள் மறியல்

ரோட்டை சீரமைக்க ேகாரி சந்தை வியாபாரிகள் மறியல்

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் சந்தை திடலுக்குள் செல்லும் ரோடு 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக உள்ளதை சீரமைக்க வாரச் சந்தை வியாபாரிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கண்டுகொள்ளாததால் நேற்று காலை பேரையூர் ரோட்டில் 20 நிமிடங்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. போலீசாரும், அதிகாரிகளும் சமரசம் செய்தனர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகம் சென்று முற்றுகையிட்டனர். 25 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி